ஆசிரியை கொடுமை தாங்காமல் எலி மருந்து குடித்த
மாணவி மரணம்!
ஈரோடு மாவட்டம், அரச்சலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கோபாலிப்பாறையை சேர்ந்தவர் சேகர் (வயது-41). லாரி ஓட்டுனராக இருக்கும் இவருடைய மனைவி கவுசல்யா. இருவரும், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு தேவயாணி (வயது-18), சந்தியா(வயது-14), என இரு மகள்கள் உள்ளனர். இவர்கள் கோபாலிப்பாறையில் உள்ள தனது பாட்டி வீட்டில் இருந்தபடி, அரச்சலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தேவயாணி பிளஸ் 2, சந்தியா எட்டாம் வகுப்பு படித்து வருகின்றனர்.
தேவயாணி படிக்கும் பள்ளியில் வேதியியல் பாடம் எடுக்கும் ஆசிரியை செல்வலட்சுமி என்பவர், மாணவி தேவயாணியிடம் ரெக்கார்டு நோட்டு எழுதி வராததை கண்டித்து, அவரை கேவலமாக திட்டியுள்ளார். மேலும், காலாண்டு தேர்வுக்கு முன்பு தேவயாணியை கன்னத்தில் அடித்து, வெயிலில் நிற்க வைத்து, கொடுமைப்படுத்தியுள்ளார்.
விடுமுறை முடிந்து, பள்ளிக்கு திரும்பிய தேவயாணியை, வேதியியல் ஆசிரியை தொடர்ந்து மன உளைச்சலுக்கு ஆளாக்கியதால், கடந்த, 8-ஆம் தேதி வீட்டில் இருந்த எலி மருந்தை தேவயாணி சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
இதையறிந்த உறவினர்கள் இவரை சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் அவர், நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
பின்னர், இதுகுறித்து மாணவியின் தாய் கவுசல்யா, அரச்சலூர் போலீசில் நேற்று புகார் கொடுத்தார். வழக்கு பதிவு செய்த போலீசார், தலைமறைவான வேதியியல் ஆசிரியரை தேடி வருகின்றனர்.
- சிவசுப்பிரமணியம்