
கரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் காரணமாக முன்பு நடந்ததை போல் சென்னை கலைவாணர் அரங்கில் இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 5 ஆம் தேதி துவங்கியது. ஆளுநர் உரையுடன் தொடங்கிய சட்டப்பேரவை கூட்டம் இன்று வரை நடைபெறும் என்று அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இரண்டாம் நாளான நேற்று தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதல் முறையாக சட்டப்பேரவையின் கேள்வி நேரம் நேரலையாக ஒளிபரப்பாகியது. அதேபோல் இன்றும் ஒளிபரப்பு செய்யப்பட்டது. ஆளுநர் உரையை அதிமுக, விசிக ஆகிய கட்சிகள் புறக்கணித்து வெளிநடப்பு செய்தது.
இன்றும் அமைச்சர் ஐ.பெரியசாமி கொண்டுவந்த கூட்டுறவுச் சங்க சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து அதிமுக வெளிநடப்பு செய்தது. இன்று தமிழக முதல்வர் ஆளுநர் உரையின் மீது நன்றியுரை ஆற்றினார். இந்நிலையில் சட்டப்பேரவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.