Skip to main content

அறிவிக்கப்பட்ட குற்றவாளி சுபாஷ் பண்ணையார் சரணடைந்தார்

Published on 11/10/2017 | Edited on 11/10/2017
அறிவிக்கப்பட்ட குற்றவாளி சுபாஷ் பண்ணையார் சரணடைந்தார்



கடந்த 2016 பிப்-24 அன்று தூத்துக்குடி நீதி மன்றத்தில் ஆஐர்படுத்தும், பொருட்டு பாளை மத்திய ஜெயிலிலிருந்த பசுபதி பாண்டியனின் கூட்டாளி புல்லாவெளி சிங்காரத்தைப் பாதுகாப்புடன் கோலீஸ் வேனில் ஏற்றிக் கொண்டு சென்றனர். பாளையின் கே.டி.சி.நகர் பக்கம் போலீஸ் வாகனம் வந்த போது, திடீரென இரண்டு கார்களில் வந்தவர்கள் வழிமறித்துப் போலீசாரைத் தாக்கிவிட்டு அவர்கள் பாதுகாப்பிலிருந்த புல்லா வெளி சிங்காரத்தை வெளியே இழுத்துப்போட்டு வீச்சரிவாட்களால் வெட்டிப் படுகொலை செய்தனர். பதற வைக்கிற அது தொடர்பான சம்பவத்தை அப்போதே நக்கீரனின் இணையதளத்தில் வெளியிட்டிருந்தோம்.

இந்தப் பட்டப் பகல் படுகொலையில் தொடர்புடைய குற்றவாளிகள் 12 பேர்கள் கைது செய்யப்படடாலும் ஏ.1 குற்றவாளியான சுபாஷ்பண்ணையார் பிடிபடாமல் தலைமறைவாகியிருந்தார் நெல்லை கூடுதல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்த நேரத்திலும், அவர் ஆஐராகாமல் போனதால், அவரைத் தேடப்படும் குற்றவாளி என்று பாளை உதவிக் கமிசனரான விஜயகுமார் அறிவித்தார். அக் 13க்குள் அவர் சரணடையாமலிருந்தால் அவருடைய சொத்துக்களும் முடக்கப்படும் என்று அறிவித்திருந்தார் உதவிக்கமிசனர்.
 
’’இதற்கிடையே அந்த வழக்கின் பின்னணி பற்றிய ஒரு கண்ணோட்டம்.’’
 
1993ன் போது கிளம்பிய விவகாரம் காரணமாக மூலக்கரையிலுள்ள சுபாஷ்பண்ணையாரின் தாத்தாவான சிவசுப்பிரமணிய நாடாரையும் தந்தை அசுவதி பண்ணையாரையும் வெட்டிக் கொலை செய்ததில் தொடர்புடைய பசுபதி பாண்டியன் மற்றும் அவரது கூட்டாளிகளையும் பழிவாங்கும் நிலையிருந்தவர் சுபாஷ்பண்ணையார். பகைமை காரணமாக இரண்டு தரப்புகளும் மோதிக் கொண்டதில் 13 பேர் வரை இரண்டு தரப்பிலும் பலியானார்கள். 2012 ஜனவரியில் பசுபதி பாண்டியனும் கொலை செய்யப்பட்டார். எஞ்சியிருந்தவர் பசுபதிபாண்டியனின் கிங்பின் என்று சொல்லப்படும் புல்லாவெளி சிங்காரமும் படுகொலைக்குள்ளானார்.

சிங்காரம் கொலையில் பிடிபடாமல் தொடர்ந்து சுபாஷ்பண்ணையார் தலைமறைவாக இருந்ததால் தேடப்படும் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில் நெல்லை மாவட்ட இரண்டாவது கூடுதல் நீதிமன்றத்தில் பி.சி.ஆர். நீதிமன்ற நீதிபதி சந்திராவின் முன்னிலையில் உயர்நீதிமன்ற உத்தரவின்படி இன்று தனது சகா தாராசிங்குடன் சரணடைந்தார் சுபாஷ்பாண்ணையார்.
 
-பரமசிவன்
படங்கள் : ப.இராம்குமார்

சார்ந்த செய்திகள்