கறுப்புக்கொடி ஏற்றி கண்ணீர் தீபாவளியாக
கடை பிடிக்கப் போவதாக விவசாயிகள் தீர்மானம்
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை கண்ணீர் தீபாவளியாக கடைப்பிடிப்பதோடு அரசின் கொள்கை முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் 100 கிராமத்து வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றப் போவதாக தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் முத்துப்பேட்டையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நடந்த தமிழ் மாநில விவசாயிகள் தொழிலாளர் சங்க ஒன்றிய நிர்வாகிகள் குழு கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் தற்போது நடந்து வரும் அ,தி, மு.க ஆட்சியாள் பொதுமக்கள் படும் அவதிகள் குறித்தும், விவசாய, தொழிலாளர்கள் படும் சிரமம் குறித்தும் விவதிக்கப்பட்டு தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டது. அதில் நடப்பாண்டில் டெல்டா மாவட்டத்தில் வரலாறு காணாத வறட்சியால் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். பல விவசாயிகள் பாதிக்கப்பட்டனர் வறட்சியால் வேலையை இழந்து தவிக்கும் விவசாய தொழிலாளர்களின் குடும்பத்திற்கு தீபாவளி செலவுக்கென ரூ 5000 கேட்டு அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அரசு இதுவரை கண்டு கொள்ளவில்லை. விவசாயமின்றி தவிக்கும் விவசாய தொழிலாளர்கள் கருப்புக்கொடி ஏற்றி இந்த தீபாவளியை கண்ணீர் தீபாவளியாக கொண்டாடுவது என தீர்மானம் கொண்டு வந்துள்ளனர்.
- க.செல்வகுமார்