Maridas arrested at home! BJP strongly opposes!

Advertisment

யூடியூபர் மாரிதாஸ் மதுரையில் அவரது வீட்டில் வைத்து இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டார்.

சமூக வலைதளங்களில் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகள் பதிவிட்டு வந்த யூடியூபர் மாரிதாஸ், இன்று பிற்பகல் ஒரு மணி அளவில் அவரின் வீட்டில் வைத்து காவல்துறையினர் கைதுசெய்தனர். அப்போது அதை எதிர்த்து பாஜக மாவட்டச் செயலாளர் சரவணன் தலைமையில், ‘எதன் அடிப்படையில் கைது செய்கிறீர்கள்’ என்று போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Maridas arrested at home! BJP strongly opposes!

Advertisment

அதற்கு போலீஸ் தரப்பில், “இவரின் மேல் வழக்குப் பதிவாகி உள்ளது. சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பும் நோக்கில் பொய் செய்திகளை வெளியிட்டது. சமூக நல்லிணக்கத்திற்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் தொடர்ச்சியாகச் செய்திகளைப் பரப்பியது என இரு பிரிவுகளின் கீழ் இவர்மேல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்து அவரை கைது செய்தனர்.

Maridas arrested at home! BJP strongly opposes!

கைது செய்யப்பட்ட மாரிதாஸை மதுரை புதூர் காவல்நிலையத்தில் வைத்து, அண்ணாநகர் துணை கண்காணிப்பாளர் சூரக்குமார் தலைமையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். அதேசமயம், பாஜகவை சேர்ந்த50க்கும் மேற்பட்டவர்கள் காவல்நிலையம் வெளியே குவிந்திருக்கின்றனர். இதன் காரணமாக அங்கு அதிக அளவில் போலீஸ் குவிக்கப்பட்டு உள்ளனர். இச்சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.