Skip to main content

முதல்முறையாக ஸ்ரீரங்கம் கோவிலுக்கு செல்லும் ஸ்டாலின் - அரசியல் வட்டாரங்களில் விவாதம்

Published on 21/06/2018 | Edited on 21/06/2018
ss

 

திருச்சிக்கு இன்று காலை வியாழக்கிழமை விமானம் மூலம்  மு.க.ஸ்டாலின்  வந்தடைந்தார். அவருக்கு கே.என்.நேரு தலைமையில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் சாலை அணிவித்து மரியாதை செய்தனர். விமான நிலையத்திலிருந்து இந்தியன் முஸ்லீம் லீக்கின் தேசிய தலைவர் காதர் மொய்தீன் மனைவி லத்தீபா உடல்நலக்குறைவால் இருப்பதை கேள்விப்பட்டு திருச்சி காஜா நகரில் உள்ள அவருடைய வீட்டிற்கு சென்று நலம் விசாரித்தார். அதன் பிறகு இன்று மாலை 4 மணிக்கு கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு மாநில, மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் தலைமை வகித்து பேசினார்.

 

நாளை வெள்ளிக்கிழமை அதிகாலை 6.50 மணிக்கு அதிகாலையில் ஸ்ரீரங்கம் பத்மசாலியர் திருமண மண்டபத்தில் நடைபெறும் கட்சியின் மூத்த முன்னோடிகளின் இல்லத் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அப்படியே காதுகுத்து விசேஷ நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள 25 பேருக்கு அன்னதானம் இலவச வேட்டி சேலை வழங்கும் நிகழ்ச்சியும் வைத்திருக்கிறார்களாம். விஸ்வரூப தரிசனத்திலும் கலந்து கொள்ளுவார் என்கிறார்கள். இத்தனை ஆண்டு கால அரசியல் வரலாற்றில் ஸ்டாலின் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலுக்கு கூட அந்த கோவில் உள்ளே நுழைந்தது இல்லை. ஆனால் தற்போது ஸ்ரீரங்கம் கோவில் உள் வளாகத்திற்கு வந்தும், சாமியை தரிக்கவும் வருவதாகவும் கட்சிக்காரர்கள் இதை சீக்கெரட்டாக தங்களுக்குள் பரபரப்பாக பேசிக்கொள்கிறார்கள். 

 

இதற்கு முன்பு ஸ்டாலின் மனைவி துா்காஸ்டாலின் கோவில்களுக்கு அடிக்கடி சென்று வருவது உண்டு. ஆனால் தற்போது ஸ்டாலின் ஸ்ரீரங்கம் வருகை உயர் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது. 

சார்ந்த செய்திகள்