Skip to main content

தொடர் விடுமுறை பஸ், ரயில்களில் பொதுமக்கள் கூட்டம்

Published on 29/09/2017 | Edited on 29/09/2017
தொடர் விடுமுறை பஸ், ரயில்களில் பொதுமக்கள் கூட்டம்

பஸ், ரயில்களில் பொதுமக்கள் கூட்டம்: இன்று ஆயுத  பூஜை, நாளை விஜய தசமி விடுமுறை நாளாகும். 1ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, 2ம்  தேதி காந்தி ஜெயந்தி என தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை வருகிறது. இந்த நிலையில், சென்னையில் வசிப்போர் மற்றும் தங்கி படிக்கும் மாணவர்கள் விடுமுறையை கழிக்க சொந்த ஊர்களுக்கு புறப்பட தொடங்கினர். இதனால் சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் நேற்று மாலை மக்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக ரயில்களில் முன்பதிவில்லா பெட்டியில் நிற்க கூட முடியாத அளவுக்கு நெரிசலில் மக்கள் பயணம் செய்ததை காண முடிந்தது.

ரயில்களில்  டிக்கெட் கிடைக்காதவர்கள் எப்படியாவது தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல  திட்டமிட்டனர். இதனால், நேற்று மாலை முதல் கோயம்பேடு பஸ் நிலையத்தில் அவர்கள் குவிய தொடங்கினர். பஸ் நிலையங்களிலும் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கூடுதலாக 600 பஸ்கள் இயக்கம்: சென்னையில் இருந்து வழக்கமாக வெளியூர்களுக்கு ஒரு நாளைக்கு 2275 பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதில் 450 பேருந்துகள் மட்டுமே முன்பதிவு செய்யகூடியவை. இந்த பேருந்துகளுக்கு மட்டும் பயணிகள் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. ஏற்கனவே தொடர் விடுமுறை காரணமாக இந்த 450 பேருந்துகளிலும் முழுமையாக முன்பதிவு செய்யப்பட்டுவிட்டது. இந்நிலையில் சென்னையில் இருந்து இன்று முதல் 600 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்