Skip to main content

தி.மு.க தொண்டர்களிடம் திருட்டு: 13 பேர் கைது! ரூ.42 ஆயிரம் பறிமுதல்!

Published on 01/08/2018 | Edited on 27/08/2018
theft


காவேரி மருத்துவமனையில் திமுக தலைவர் கலைஞர் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனை முன்பு கூடிய தி.மு.க., தொண்டர்களிடம் கைவரிசை காட்டிய, 13 பேர் கைது செய்து காவல்துறை சிறையில் அடைத்துள்ளது.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில், தி.மு.க., தலைவர் கருணாநிதி, உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். அங்கு, இரவும், பகலும் ஆயிரக்கணக்காக தொண்டர்கள் திரண்டு திமுக தலைவர் உடல்நலம் பெற்று திரும்ப வர வேண்டி கோஷங்களை எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி, பல்வேறு தொண்டர்களின் மொபைல் போன், பர்ஸ் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம், புதுப்பேட்டையைச் சேர்ந்த முத்துகுமார் (48), முசிறியைச் சேர்ந்த ஜீவரத்தினம் (40) ஆகியோரை, மயிலாப்பூர் காவல்துறை கைது செய்தனர்.

அவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கூட்டம் அதிகமாக கூடியுள்ள காவேரி மருத்துவமனையில் தங்களின் கைவரிசையைக் காட்ட ராமநாதபுரம், தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தங்களின் நண்பர்களையே சென்னை வர சொல்லி இருக்கிறார்கள், சென்னை வந்த 13 பேர், கோயம்பேட்டில் உள்ள விடுதியில் அறை எடுத்து தங்கியதும், சுழற்சி முறையில் காவேரி மருத்துவமனை பகுதிக்கு சென்று, தொண்டர்களிடம் கைவரிசை காட்டியதும் தெரியவந்தது.

இதையடுத்து நேற்று காலை, கோயம்பேட்டில் உள்ள விடுதிக்கு சென்ற மயிலாப்பூர் போலீசார், திண்டுக்கலைச் சேர்ந்த அமீர் பாஷா 51, வேலுாரைச் சேர்ந்த மணிகண்டன் 32 உள்ளிட்ட 13 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 42 ஆயிரம் ரூபாய், ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அளித்த புகாரில் 60 ஆயிரம் மதிப்புள்ள பக்கம் காணவில்லை என்று கூறுகின்றனர். ஆனால் இதுவரை ரூ.42 ஆயிரம் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது.

சார்ந்த செய்திகள்