Holiday declared for schools in the Nilgiris

நீலகிரி மற்றும் கோவை ஆகிய இரு மாவட்டங்களுக்கு இன்று (13.06.2025) மிகக் கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதோடு கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, தேனி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி ஆகிய 7 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதே சமயம் நீலகிரி மாவட்டத்திற்கு நாளை (14.06.2025) மற்றும் நாளை மறுநாள் (15.06.2025) அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் பிறப்பித்திருந்தது.

Advertisment

இந்நிலையில் ரெட் அலர்ட் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு நாளை (14.06.2025) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தனியார் பள்ளிகள், சி. பி.எஸ்.சி. மற்றும் ஐ.சி.எஸ்.சி. ஆகிய பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவுறுத்தியுள்ளார். எனவே மாவட்ட நிர்வாகத்தின் இந்த அறிவிப்பை மீறி பள்ளிகள் செயல்படக்கூடாது என்ற அறிவுறுத்தலும் வழங்கப்பட்டுள்ளது.

Advertisment

மாவட்ட நிர்வாகத்தின் இந்த அறிவிப்பை மீறி கல்விகள் நிலையங்கள் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக நாளை சனிக்கிழமை என்பதால் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.