Schoolgirls vomit and faint after eating food at a government hostel

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி செயல் பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் 29 மாணவிகள் அருகே உள்ள அரசு மாணவியர் விடுதியில் தங்கி கல்வி கற்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல் மாணவிகள் உணவு சாப்பிட்டு விட்டு பள்ளிக்குச் சென்றுள்ளனர். ஆனால், பள்ளிக்கு வந்த மாணவிகளுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.

Advertisment

இதனைத் தொடர்ந்து அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் மாணவிகளை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மாணவிகள் அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் விரைந்து வந்த அதிகாரிகள் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

காலை உணவு சாப்பிட்ட மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்ட சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.