Skip to main content

பேராசிரியையின் நிலம் அபகரிப்பு: இருவர் கைது

Published on 07/10/2017 | Edited on 07/10/2017
பேராசிரியையின் நிலம் அபகரிப்பு: இருவர் கைது

சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி பிரேமா. அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக உள்ளார். இவருக்கு சொந்தமான நிலம் திருவள்ளூர் அருகே உள்ள பெருமாள்பட்டு கிராமத்தில் உள்ளது. அந்த நிலத்தை பார்ப்பதற்காக பிரேமா வந்தார். அப்போது வேப்பம்பட்டை சேர்ந்த பச்சை முத்து, நடராசன் ஆகியோர் ஆள்மாறாட்டம் செய்து நிலத்தை அபகரித்து இருப்பது தெரியவந்தது.

இது குறித்து திருவள்ளூர் மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு போலீசில் பிரேமா புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நிலமோசடியில் ஈடுபட்ட பச்சைமுத்து, நடராஜன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். நிலத்தின் மதிப்பு ரூ. 20 லட்சம் ஆகும். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி. சக்கரவர்த்தி கூறும்போது, கடந்த 6 மாதங்களில் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவில் சுமார் 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.

சார்ந்த செய்திகள்