திருச்சியில் இதுவரை கரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் 50 பேர் இருக்கிறார்கள். இந்த நிலையில் நேற்று 20.04.2020 புதிதாக இன்னும் 4 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டது. இந்த நிலையில் கரோனா வார்ட்டில் சிகிச்சையில் இருந்த ஒரு பெண் திடீரென இறந்தது தற்போது பெரிய அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

trichy

திருச்சி அரசு மருத்துவமனையில் தென்னூர் சங்கரன் பிள்ளை ரோடு பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய பெண் கடந்த 1 மாதமாக மூச்சு விடச் சிரமாக இருப்பதாக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

Advertisment

கடந்த சில நாட்களுக்கு முன்பு சளி, காய்ச்சல், மற்றும் மூச்சு விடச் சிரமம் இருப்பதாக மீண்டும் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு கரோனா தொற்று இருக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறி கரோனா வார்ட்டில் அனுமதிக்கப்பட்டனர்.

http://onelink.to/nknapp

அங்கே வைத்து அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. இந்த நிலையில் தீவிர சிகிச்சையில் இருந்த நிலையில் திடீரென இறந்தார். இதனால் திருச்சி மருத்துவ வட்டாரத்தில் கரோனாவினால் இறந்தாரா? என அதிர்ச்சி அடைந்து அவருடைய இரத்த மாதிரிகளை மருத்துவப் பரிசோதனைக்கு எடுத்து அனுப்பி உள்ளார்கள்.

Advertisment

தற்போது திருச்சியில் 21 பேர் கரோனோ சிகிச்சை பெற்று வரும் சூழ்நிலையில் தற்போது கரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த ஒரு பெண் இறந்திருப்பது திருச்சியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.