Skip to main content

அனல் மின் நிலையத்தில் மீண்டும் மின் உற்பத்தி! 

Published on 29/04/2022 | Edited on 29/04/2022

 

Power generation again at the thermal power plant!

 

தூத்துக்குடி அனல் மின் நிலையத்திற்கு 29,000 டன் நிலக்கரி வந்திருக்கும் நிலையில், மின் உற்பத்தி அதிகரித்துள்ளது. 

 

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 210 மெகாவாட் திறன் கொண்ட ஐந்து அலகுகள் இயங்கி வருகின்றன. ஐந்து பிரிவுகளுக்கும் நாள்தோறும் 25,000 டன் நிலக்கரி தேவைப்படும் நிலையில், தட்டுப்பாடு காரணமாக நான்கு அலகுகளில் மின் உற்பத்திப் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், ஒடிஷா மாநிலத்தின் பார்தீப் துறைமுகத்தில் இருந்து தூத்துக்குடிக்கு கப்பல் மூலமாக 29,000 டன் நிலக்கரி கொண்டு வரப்பட்டது. 

 

அது, அனல் மின் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு 1, 2, 3 ஆவது அலகுகளில் தற்போது மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனல் மின்நிலையங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை

Published on 20/09/2023 | Edited on 20/09/2023

 

Income tax department conducts raids on thermal power plants

 

அனல் மின்நிலையங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

 

சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டம் படூர், சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். அதே போன்று பள்ளிக்கரணை, நீலாங்கரை, எண்ணூர், ஓஎம் ஆர் நாவலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் பொன்னேரி வெள்ளி வாயில் சாவடியில் உள்ள தனியார் பொறியியல் நிறுவனத்தில் வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகார் தொடர்பாக வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. காலை 7 மணியளவில் இருந்து இந்த சோதனை நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.

 

இந்நிலையில் தூத்துக்குடியில் உள்ள அனல் மின் நிலையத்தில் வருமானவரித்துறையின் 3 அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து அனல்மின் நிலையத்திற்கு அமைக்கப்பட்ட நிலக்கரி கன்வேயர் பெல்ட் பணி தொடர்பாக வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். அதே சமயம் வட சென்னை அனல் மின்நிலையம், மேட்டூர் அனல் மின்நிலையத்தில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

Next Story

வடசென்னை அனல்மின் நிலையத்தில் தீ விபத்து

Published on 04/09/2023 | Edited on 04/09/2023

 

Fire incident at North Chennai thermal power station

 

வடசென்னை அனல்மின் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

 

வட சென்னை அனல் மின் நிலையத்தில் ஜெனரேட்டர் டிரான்ஸ்பார்மரில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வடசென்னை அனல்மின் நிலையத்தின் 2 வது நிலையில் உள்ள 2 வது அலகில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.  இந்த தீ விபத்தின் காரணமாக 600 மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.