சினிமா டிக்கெட் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள அனுமதி
தியேட்டர்களுக்கு கடந்த 27-ந்தேதி முதல் தமிழக அரசு உள்ளாட்சி வரி விதித்துள்ளது. ஏற்கனவே ஜி.எஸ்.டி. வரி விதிப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் உள்ளாட்சி வரியும் விதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த இரட்டை வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், கேளிக்கை வரியை முழுவதுமாக ரத்து செய்ய வலுயுறுத்தி புதிய படங்களை திரையிடுவது இல்லை என்று தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்திருந்தது. சினிமா டிக்கெட் கட்டணத்தை 25% வரை உயர்த்திக்கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.