Published on 20/03/2022 | Edited on 20/03/2022

மாபெரும் புத்தக பூங்கா மற்றும் மாவட்டத்தோரும் புத்தக காட்சிகள் நடத்தப்படும் என்ற அறிவிப்புகளுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பபாசி நிர்வாகிகள் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
அனைத்து நூல்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் மாபெரும் புத்தக பூங்கா அமைக்கப்படும் என்றும், அனைத்து மாவட்டங்களிலும் புத்தக காட்சிகள் நடத்தப்படும் என்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இதற்காக, தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கமான பபாசியின் தலைவர் வைரவன், செயலாளர் முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் சென்னையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.