
பிரதமர் நரேந்திர மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தலைவர் கலைஞர் வீடு, அண்ணா அறிவாலயத்தில் கருப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளது.
சென்னையை அடுத்த மாமல்லபுரம் அருகேயுள்ள திருவிடந்தையில் ராணுவ தளவாட கண்காட்சி நடைபெறுகிறது. இந்த ராணுவ கண்காட்சியை முறைப்படி தொடங்கி வைக்க டெல்லியிலிருந்து சென்னைக்கு வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி.
இந்நிலையில், உச்சநீதிமன்றத் தீர்ப்பினை மதித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காது, காலம்தாழ்த்தியது மட்டுமல்லாமல், தீர்ப்பையே புறக்கணித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க., தலைவர் கலைஞர் வீட்டிலும், தி.மு.க தலைமையகமான அண்ணா அறிவாலயத்திலும் கருப்பு கொடி ஏற்றப்பட்டது.