
மருத்துவமனைகள் மற்றும் இரத்த வங்கிகளுக்கான இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட “ஆன் டிமாண்டு பிளட் லாஜிஸ்டிக்ஸ்” செயல்தளம் லைடஸ் டெக்னாலஜிஸ் வெளியிட்டு இருக்கிறது
செயல்தள சேவைகளில் உலகளவில் முதன்மை வகிக்கும் மற்றும் அடுத்த தலைமுறை தொழில்நுட்ப திறனுடன் சேவைகளை வழங்கும் நிறுவனமான லைடஸ் டெக்னாலஜிஸ் (OTCMKTS: LYTHF),இந்தியாவின் முதல் ஆன்-டிமாண்டு இரத்த கூறுகள் மேலாண்மை மற்றும் லாஜிஸ்டிக்ஸ் செயல்தளமான Blod.inஎன்ற நிறுவனத்தின் கையகப்படுத்தல் நிறைவடைந்திருப்பதை இங்கு அறிவித்திருக்கிறது.தற்போது சென்னையில் இயங்கி வரும் இந்நிறுவனம், விரைவில் இந்தியாவெங்கும் விரிவுபடுத்தப்படவிருக்கிறது.
லைடஸ் ஹெல்த்டெக் வழியாககையகப்படுத்தப்பட்டிருக்கும் Blod.inஇதற்கு முற்றிலும் சொந்தமான சுகாதாரத் தொழில்நுட்ப துணை நிறுவனமாக இயங்கும். இன்றியமையாத சுகாதார பராமரிப்பு தேவைகளை திறம்பட பூர்த்தி செய்வதிலும் லாஜிஸ்டிக்ஸ் சேவைகளை மேம்படுத்துவதிலும் மற்றும் அடிப்படை நோக்கமான மக்களின் உயிர்களை காப்பதிலும் மருத்துவமனைகள் மற்றும் இரத்த வங்கிகளுடன் (தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள்) ஒருங்கிணைந்து செயலாற்றுவதில் லைடஸ்-ன் அர்ப்பணிப்பை இந்த கையகப்படுத்தல் நடவடிக்கை சுட்டிக்காட்டுகிறது. இந்த இறுதிநிலை கூட்டாண்மை நடவடிக்கையானது உயிர்காக்கும் இரத்தம் மற்றும் அதன் தயாரிப்பு பொருட்கள் உரிய நேரத்தில் விரைவாக கிடைப்பதை உறுதி செய்யும் மற்றும் சுகாதாரப் பராமரிப்புக்கான சூழலமைப்பின் ஒட்டுமொத்த திறனை மேம்படுத்தும். கடந்த 12 மாதங்கள் காலஅளவில் 30 என்ற அளவிலிருந்து 140 மருத்துவமனைகள் என மிக விரைவான வளர்ச்சியை Blod.in பதிவு செய்திருக்கிறது.
ஒவ்வொரு மாதமும் முந்தைய மாதத்தை விட 20% வளர்ச்சியை இது பிரதிபலிக்கிறது. சென்னையில் தற்போது இயங்கி வரும் இச்செயல்தளம் இன்னும் 100 மருத்துவமனைகள் மற்றும் 15-க்கும் அதிகமான இரத்த வங்கிகளுக்கு தனது சேவையை விரிவுபடுத்த திட்டமிட்டிருக்கிறது; அத்துடன் இதன் அடுத்தகட்ட செயல்பாட்டில் பெங்களூரு, மும்பை, ஹைதராபாத் மற்றும் பிற பெருநகரங்களிலும் தனது சேவையை தொடங்க இது திட்டமிட்டிருக்கிறது. Blod.in செயற்கை நுண்ணறிவால் முன்னெடுக்கப்படும் தொழில்நுட்பமானது யுஎஸ் மற்றும் யுஏஇ போன்ற உலகளாவிய சந்தைகளுக்கும் விரைவில் பரவலாக்கப்படும்; இத்தொழில்நுட்பம் மூலம் இரத்தம் தொடர்பான பொருட்களுக்கான இருப்பு அளவு மேம்படும் மற்றும் கழிவுகள் குறைக்கப்படும்; நோயாளிகள், மருத்துவமனைகள் மற்றும் இரத்த வங்கிகளுக்கு உரிய நேரத்திற்குள் விரைவாக இரத்தம் கிடைக்கப் பெறுவதை இத்தொழில்நுட்பம் உறுதி செய்யும்.