
ஈரோடு மாவட்டம் பவானி செம்பண்டாம்பாளையத்தை சேர்ந்த முருகேசன் மகன் கார்த்திக் (30). கட்டிட தொழிலாளி. இவருக்கு நித்யாதேவி என்ற மனைவியும், 3 வயதில் மகளும் உள்ளனர். கார்த்திக்கிற்கு மதுப்பழக்கம் இருப்பதால், கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, நித்யாதேவி குழந்தையுடன் அவரது அம்மா வீட்டிற்கு சென்று விட்டார். மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்திலும், மதுப்பழக்கத்தை கைவிட முடியாத விரக்தியில் கடந்த 30ம் தேதி கார்த்தி விஷ மாத்திரையை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் கார்த்திக்கை மீட்டு அந்தியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்திக் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.