தமிழகத்தின் 22 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வெப்பச் சலனம் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், தருமபுரி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என அறிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம் சேலம், அரியலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை ,மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக அறிவித்துள்ளது.

Advertisment

Rains expected in 22 districts

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கோவை, நீலகிரி, நெல்லை, தேனி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, ஆதனூர், மெய்யூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பொழிந்தது.கனமழை காரணமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் அறிவித்துள்ளார்.

Advertisment