/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/5656_3.jpg)
பேராசிரியை நிர்மலா தேவி ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.
மதுரை மத்திய சிறையில் இருந்து அழைத்து வரப்பட்ட அவரை, காவல்துறை வாகனத்தில் இருந்து கீழே இறங்கிய மகளிர் காக்கிகள், அவரை வேகமாக இழுத்துச் சென்றனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவரை மீண்டும் காவல்துறை வாகனத்தில் ஏற்றுவதற்காக வேகமாக அழைத்துச் சென்றனர்.
அப்போது இதனை பார்த்த வழக்கறிஞர்கள் சிலர், ஒரு விசாரணை கைதியை இப்படியா தரதரவென்று இழுத்துச் செல்வது?. காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ளார். பலத்த போலீஸ் பாதுகாப்பு உள்ளது. எங்கே தப்பி ஓடிப்போவாரா?இங்கே குவிந்துள்ள செய்தியாளர்களிடம் ஏதாவது பேசிவிடுவாரோஎன்ற பயத்திலேயே போலீசார் அவரை வேகவேகமாக இழுத்துச் செல்கின்றனர். நீதிமன்றத்திலேயே இப்படி விதி மீறல் செய்வதா? என்று முணுமுணுத்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)