சித்த மருத்துவர் மர்ம காய்ச்சலுக்கு பலி
தண்டராம்பட்டு அருகே உள்ள இளையாங்கண்ணி கிராமத்தை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி மகன் குழந்தை ஏசு என்கிற அருண் (வயது 39) சித்த மருத்துவர்.
திருவண்ணாமலையில் லோட்டாஸ் ஆயுர்வேத கிளினிக் என்ற பெயரில் கிளினிக் வைத்து பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம காய்ச்சல் ஏற்பட்டது. அவரை திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். தொடர்ந்து சென்னை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
பின்னர் வீடு திரும்பினார் நேற்று அவருக்கு மீண்டும் காய்ச்சல் ஏற்பட்டது. மிகவும் உடல் நலம் பாதிக்கப்பட்ட அவரை திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சித்த மருத்துவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்ட எல்லை பிரச்சனை காரணமாக இந்த கிராமத்தில் சுகாதார பணிகள் எதுவும் நடைபெறவில்லை. பரவி வரும் மர்ம காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.