சென்னை, மயிலாப்பூர் கிழக்கு மாட வீதியில், தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை சார்பாக விபத்தில்லா தீபாவளியை கொண்டாட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை மயிலாப்பூர் தீயணைப்பு நிலையத் தீயணைப்பு வீரர்கள் நடத்தினர். மேலும் இந்நிகழ்ச்சியின்போது விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது.