பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு இடம்பெயர்ந்த இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையிலான குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை இரு அவையிலும் உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார்.

Advertisment

SupremeCourt-CAA2019-MakkalNeedhiMaiam-kamal

இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், எதிர்கட்சியினரும் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மக்கள் நீதி மய்யம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. ஏற்கனவே இந்திய யூனியன் முஸ்லிம் லீக், காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் வழக்கு தொடர்ந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.