காதில் பூ சுற்றி மனுகொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட நபர்

தமிழக அரசிடம் மாதச் சம்பளம் வாங்கிகொண்டு முறையாக வேலை செய்யாமல் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வட்டார வளர்ச்சி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்ககோரியும், தன்னை கொடைக்கானல் வட்டார வளர்ச்சி அலுவலராக நியமிக்ககோரி காதில் பூ சுற்றி கொண்டு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியரிடம் கணேஷ்பாபு என்பவர் மனுகொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டார்.