Skip to main content

பேரிடர் மேலாண்மை மீட்பு மற்றும் பாதுகாப்பு பணி ஒத்திகை(படங்கள்)

Published on 25/09/2017 | Edited on 25/09/2017

பேரிடர் மேலாண்மை மீட்பு மற்றும்
 பாதுகாப்பு பணி ஒத்திகை(படங்கள்)





இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சீதக்காதி சேதுபதி நீச்சல் குளத்தில் பேரிடர் மேலாண்மை மீட்பு மற்றும் பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி மாவட்ட ஆட்சியர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது.

இராமநாதபுரம் மாவட்டம் நீண்ட கடற்கரையை கொண்டது, புயல்,வெள்ளம், கடல்சீற்றம், வறட்சி உள்ளிட்ட பேரிடர்கள் ஏற்படும் பட்சத்தில் பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் பல்நோக்கு பேரிடர் பாதுகாப்பு மையம்,முன்னெச்சரிக்கை கோபுரங்கள்,பாதுகாப்பான வீடுகள்,பேரிடர்கால சாலை மேம்பாட்டு திட்டங்கள் உட்பட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றனர்.

மேலும் பேரிடர் காலங்களில் தன்னார்வமாக மீட்பு பணியில் ஈடுபட விருப்பம் தெரிவித்த 1820 நபர்களை கடலோர மற்றும் மாவட்டத்தில் உட்பகுதிகளில் பேரிடர் கால முதன்மை பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.  இவர்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்பது,பாம்பு பிடித்தல்,புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை செப்பணியிடுவது போன்ற பணிகளில் ஈடுபடுவார்கள் என்றும் இவர்களது கைபேசி எண்கள் பொதுமக்களுக்கு எளிதில் தொடர்பு கொள்ளும் வகையில் தெரியப்படுத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

- பாலாஜி

சார்ந்த செய்திகள்