Skip to main content

ரோடு போடாததால் எம்.பி செய்த சாலை மறியல்...

Published on 14/11/2019 | Edited on 14/11/2019

திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் நகரில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் சாலையில் செய்யார் நகரத்துக்கு அடுத்தபடியாக புளியரம்பாக்கம் கிராமம் உள்ளது. இந்த வழியாகத்தான் காஞ்சிபுரம் செல்ல வேண்டும். இந்த சாலையில் செல்லும்போது வழியில் புளியரம்பாக்கம் ஏரி உள்ளதால் மழைக்காலங்களில் இந்த சாலை குண்டும், குழியுமாக மாறிவிடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
 

road blocked by MP


அதனால் ஏரிக்கரையை ஓட்டி செல்லும் செய்யார் – காஞ்சிபுரம் சாலையில் ஏரிக்கரை மற்றும் நீர்பிடிப்பு பகுதியில் வரும் 1.9 கி.மீ தூரத்துக்கு மட்டும் சிமெண்ட் சாலையாக அமைத்துவிடலாம் என நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்காக 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு அதற்காக ஒப்பந்தம் கோரப்பட்டது.

ஒப்பந்தத்தை நாமக்கல்லை சேர்ந்த ஒரு நிறுவனம் எடுத்துள்ளது. இந்த நிறுவனம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மிக வேண்டப்பட்ட நிறுவனம் எனக்கூறப்படுகிறது. கடந்த 8 மாதங்களாக பணிகளை செய்யாமல் அந்த ரோட்டை கொத்தி போட்டுவிட்டு மட்டும் சென்றுள்ளனர்.

இதனால் பிஸியான இந்த சாலையில் பயணிக்க முடியாமல் 6 கி.மீ சுத்திக்கொண்டு செல்கின்றனர். இதுப்பற்றி ஆரணி பாராளமன்ற தொகுதி எம்.பியும், காங்கிரஸ் கட்சியின் செயல்தலைவருமான விஷ்ணுபிரசாத்திடம் பொதுமக்கள் முறையிட்டதை தொடர்ந்து, நவம்பர் 13ந்தேதி செய்யார் அண்ணா சிலையருகே சாலை மறியல் செய்தார்.

இதனால் அதிர்ச்சியான காவல்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் வந்து சமாதானம் செய்து இரண்டு மாதத்துக்குள் சாலை அமைத்து தந்துவிடுகிறோம் என உறுதியளித்தபின், சாலைமறியலை முடித்துக்கொண்டு கிளம்பினார்.


எம்.பியே சாலைமறியல் செய்தது பொதுமக்களை ஆச்சர்யமாக பார்க்க வைத்தது. இதுப்பற்றி எம்.பி விஷ்ணுபிரசாத்திடம் நாம் கேட்டபோது, "கடந்த 5 மாதமாக சாலையை கொத்திப்போட்டுவிட்டு போயுள்ளார்கள். 8 மாதமாக இந்த பணி நடைபெறாமல் நிற்கிறது. அதிகாரிகளிடம் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் சாலைமறியல் செய்தேன்" என்றார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

கடலூர் - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் சாலை மறியல்  

Published on 02/12/2022 | Edited on 02/12/2022

 

People struggle road on Cuddalore-Chidambaram National Highway!

 

கடலூர் - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் நான்கு வழிச்சாலை பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஆலப்பாக்கம் கிராமம் அருகே மேம்பாலம் அமைத்துத் தரக்கோரி நெடுஞ்சாலைத்துறை மற்றும் கோட்டாட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

 

இதனைத் தொடர்ந்து, கடலூர்-சிதம்பரம் சாலையில் ஆலப்பாக்கம் என்ற இடத்தில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சுரங்கப்பாதை, பேருந்து நிழற்குடை, இணைப்பு சாலை வசதி செய்து தர வலியுறுத்தி வெள்ளிக்கிழமை சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 20 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனையறிந்த சிதம்பரம் உதவி காவல் கண்காணிப்பாளர் ரகுபதி, காவல் ஆய்வாளர் வினோதா ஆகியோர் கோரிக்கை குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பேச்சுவார்த்தை நடத்தி சாலைமறியல் போராட்டத்தைக் கலைந்து போகச்செய்தனர்.

 

 

Next Story

நிவாரணம் வழங்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்

Published on 16/11/2022 | Edited on 16/11/2022

 

Villagers block road near Sirkazhi demanding relief

 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சூரக்காடு கிராமத்தில் கனமழையால் வீடுகள் தண்ணீரில் மூழ்கின. இப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு முகாமில் தங்க வைக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டு வந்தது.

 

தற்போது ஓரளவு தண்ணீர் வடிந்த நிலையில் வீட்டிற்குத் திரும்பினர். ஆனால், தங்கள் பகுதிகளுக்கு அதிகாரிகளோ அமைச்சர்களோ யாரும் பார்க்க வரவில்லை. நிவாரணமும் வழங்கவில்லை. மழையால் வாழ்வாதாரம் மொத்தமும் இழந்து சமைப்பதற்குக் கூட பொருட்கள் இல்லாமல் குழந்தைகளை வைத்துக் கொண்டு சிரமப்படுவதாக ஆத்திரமடைந்த பொதுமக்கள் சீர்காழி - நாகப்பட்டினம் சாலையில் திடீரென ஒன்றுகூடி சாலைமறியலில் ஈடுபட்டனர்.

 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சீர்காழி வட்டாட்சியர், அனைவருக்கும் நிவாரணம் வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார் என அப்பகுதி மக்களுக்கு எடுத்துக் கூறியதன் பிறகு மறியலை விலக்கிக்கொண்டனர்.