மயிலாடுதுறையில் மஹா புஷ்காரம் விழா துவங்கியது

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் துலாக்கட்டத்தில் 144 ஆண்டுகளுக்கு பிறகு காவிரி மாஹா புஷ்காரம் 10 நாள் விழாவாக இன்று காலை துவங்கியது.
மயிலாடுதுறையில் கடந்து போகும் காவிரி ஆறு தெய்வ நம்பிக்கை உடையவர்களின் புகழ்பெற்ற இடமாக விளங்கிவருகிறது. மேற்கு நோக்கிய நந்திபகவான் கர்நாடகத்திற்கு பிறகு மயிலாடுதுறையில் தான் இருக்கிறது. இதனால் இதனை ரிஷப தீர்த்தம் என்றும் அழைக்கின்றனர். நவக்கிரகங்களின் சுபக்கோலான குரு துலாம் ராசிக்கு பெயற்சி அடைந்துள்ளார். பண்ணிரண்டு ராசிகளில் துலாராசி காவிரிக்கு உரியதாகும்.
இதனை முன்னிட்டு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவது புஷ்காரம் என்றும், 144 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கின்ற இந்த விழா மஹா புஷ்காரம் என்று கொண்டாடிவருகின்றனர் பக்தர்கள். இதற்காக வரண்டுகிடக்கின்ற காவிரியில் மயிலாடுதுறையில் 2 கோடி செலவில் நீர்த்தேகம் கட்டப்பட்டு, நிலத்தடிநீரை நிறப்பி, அதில் காவிரித்தாய் சிலை நிறுவப்பட்டு, விழா எடுக்கப்பட்டுள்ளது.
புஷ்காரவிழாவை காலையில் காஞ்சி சங்கராச்சாரியார் கொடியேற்றி துவங்கிவைத்து, காவிரி துலாக்கட்டத்தில் நீராடினர். அவரோடு ஆதினகர்த்தர்களும் நீராடினர். இன்று துவங்கி 24 ம் தேதிவரை விழா நடக்க இருக்கும் விழாவிற்காக 1000 போலீசார் குவித்து பாதுகாப்பி பணியில் ஈடுபட்டுள்ளனர்.
-க.செல்வகுமார்