டாஸ்மாக் கடையை பெண்கள் முற்றுகை
ஆவடி - பூந்தமல்லி நெடுஞ்சாலையில், ஜெ.பி எஸ்டேட் பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடையால் பொதுமக்கள், வாகன ஒட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, இந்த கடையை முட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர். ஆனால் நடவடிக்கை இல்லை. இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் நேற்று மாலை டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஆவடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் முற்றுகையிட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்த அவர்கள் கலைந்து சென்றனர்.