புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி புதுச்சேரி கிராமங்களில் தொடர்ந்து ஆய்வுகள் செய்துவருகின்றார். இந்த நிலையில் புதுச்சேரியில் உள்ள மன்னாரிப்பட்டுஎன்ற கிராமத்தை பார்வையிட சென்ற துணைநிலை ஆளுநர் அந்த கிராமம் முழுவதும் தூய்மை இல்லாமல் குப்பைகளுடன்இருப்பதை கண்டித்து அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பலமுறை தூய்மை பணியில் ஈடுபட்டாலும் கிராம மக்கள் சரியாக ஒத்துழைப்பு கொடுக்க மறுக்கின்றனர் எனவும் தெரிவித்தனர்.

Advertisment

kiran

மேலும் கிராம மக்கள் ஆரம்ப சுகாதாரநிலையம் இலவச அரிசி போன்ற திட்டங்கள் பற்றிய கோரிக்கையை துணைநிலை ஆளுநரிடம் முறையிட்டனர்.அதற்கு மக்களிடம்அவர், நான் பலமுறை இங்கு வந்திருக்கிறேன். எப்போதுமே குப்பைகளுடன் தூய்மையற்ற நிலையிலேயே இப்பகுதிஇருக்கிறது என கூறினார்.

Advertisment

kiran

இதன் பின் கிராமங்கள் தூய்மை சான்றிதழ் பெற்ற பிறகுதான், இலவச அரிசி இனி வழங்கப்படும். அப்படி தூய்மை சான்றிதழ் பெறாதவரை கிராமங்களுக்கு இலவச அரிசி வழங்குவது நிறுத்தி வைக்கப்படவேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.