டாஸ்மாக் ஊழியரிடம் பைக் பறிப்பு
கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை டாஸ்மாக் கடையில் சூபர்வைசராக பணியாற்றி வருபவர் ராமநாதன் (38). இவர் நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்து, பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தார். பெத்திக்குப்பம் அருகே செல்லும் போது, ராமநாதனை 2 பேர் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து பணத்தை பறிக்க முயற்சித்தனர். ஆனால் அவரிடம் பணம் எதுவும் இல்லாததால், அவர் ஓட்டி வந்த பைக்கை பறித்துக்கொண்டு தப்பினர். இதுகுறித்து சிப்காட் போலீசார் விசாரிக்கின்றனர்.