publive-image

கரோனா பெருந்தொற்று ஒமிக்ரான் என பரிணாமம் அடைந்து உலக நாடுகளை அச்சுறுத்தத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், “பொது இடங்களுக்குச் செல்ல தடுப்பூசி கட்டாயம் என அறிவிக்கப்பட்டிருப்பதைப் போன்று, அரசுத் திட்டங்களின் பயன்களைப் பெறுவதற்கும் தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் என்று அறிவிப்பது குறித்து தமிழக அரசு ஆய்வுசெய்ய வேண்டும்.” என பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Advertisment

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாட்டில் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான மக்களின் ஆர்வம் குறைந்துவருவது வருத்தமளிக்கிறது. கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை வாரத்திற்கு வாரம் குறைந்துவருவது ஆரோக்கியமான அடையாளம் அல்ல.

Advertisment

ஓமைக்ரான் கரோனா அச்சுறுத்தல் அதிகரித்துவரும் நிலையில், அதைத் தடுக்க அனைவரும் தடுப்பூசிகளை ஆர்வத்துடன் போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொள்வது குறித்து மக்களிடம் ஐயங்களும், அச்சங்களும் இருந்தால் அதை அரசு போக்க வேண்டும்.

பொது இடங்களுக்குச் செல்ல தடுப்பூசி கட்டாயம் என அறிவிக்கப்பட்டிருப்பதைப் போன்று, அரசுத் திட்டங்களின் பயன்களைப் பெறுவதற்கும் தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் என்று அறிவிப்பது குறித்து தமிழக அரசு ஆய்வு செய்ய வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.