Published on 09/06/2022 | Edited on 09/06/2022

குடும்ப தகராறு காரணமாக, அண்ணனை ஓடஓட விரட்டி கொலை செய்த தம்பியை காவலர்கள் கைது செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த அருண்பாண்டி என்பவர், மதுபோதையில் அவரது சகோதரர் அஜித்குமாரிடம் தகராறில் ஈடுபட்டு வந்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த அஜித்குமார், இறைச்சி வெட்டும் அரிவாளால் தனது அண்ணன் அருண்பாண்டியை ஓடஓட விரட்டிக் கொலை செய்துள்ளார். இந்த பதைபதைக்க வைக்கும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.
இதன் அடிப்படையில் அஜித்குமாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், கொலைக்கு உடந்தையாக இருந்ததாக கார்த்தி என்பவரையும் காவலர்கள் கைது செய்துள்ளனர்.