Skip to main content

ஆக்கிரமிப்பு என்ற பெயரில் மரங்களை அகற்றிய நகராட்சி - பொதுமக்கள் குற்றச்சாட்டு!

Published on 25/09/2017 | Edited on 25/09/2017
ஆக்கிரமிப்பு என்ற பெயரில் மரங்களை அகற்றிய நகராட்சி - பொதுமக்கள் குற்றச்சாட்டு!

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று ஆக்கிரமிப்பு என்று பெயரில் அகற்றவேண்டியதை தவிர்த்துவிட்டு சாலை ஓரங்களில் உள்ள மரங்களை அகற்றிவிட்டனர்.ஆனால் நம்முடைய மத்திய அரசு, மாநில அரசு அதிக அளவில் மரங்களை நடசொல்கிறது. ஆனால் கீழக்கரை நகராட்சி மரங்களை அகற்றுவதில் குறியாக உள்ளது என பொதுமக்கள் குற்றசாட்டு.

இதுமட்டுமல்லாமல் கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை நடத்திவருபவர் டாக்டர் நசீரா பர்வீன் இவரது மருத்துவமனையின் விளம்பரபலகை சுமார் 20 அடிக்குமேல் சிறியதாக இருந்தது அதை வேண்டுமென்றே இடித்துவிட்டாதாகவும், மற்ற இடங்களில் சரியாக அகற்றவில்லை என்று டாக்டர் நசீரா பர்வீன் கணவர் கலீல் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுபற்றி கீழக்கரை நகராட்சி கமிஷ்னர் வசந்தியோ, முறையாக அனைவருக்கும் ஆக்கிரமிப்பு அகற்றம் பற்றி முறையாக தெரிவித்துவிட்டோம். ஆனால் அவர்கள் அகற்றாமல் இருந்தால் நாங்கள் என்ன செய்வது. எங்கள் மீது கூறும் குற்ற சாட்டில் உண்மையில்லை என்றார்.

- பாலாஜி

சார்ந்த செய்திகள்