Skip to main content

27 பொருட்கள் மற்றும் சேவைகளூக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு

Published on 07/10/2017 | Edited on 07/10/2017

27 பொருட்கள் மற்றும் சேவைகளூக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு

டெல்லியில்  ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு பின்னர் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி செய்தியாளர்களூக்கு அளித்த பேட்டியில் ,  ஜிஎஸ்டி வரி வசூல் குறித்து தெளிவான தகவல்கள் கிடைக்கவில்லை.  ஆண்டுக்கு 1.5 கோடிக்கு கீழ் வணிகம் புரிவோர்  3 மாதங்களுக்கு ஒருமுறை கணக்கு தாக்கல் செய்யலாம்.  இணக்க முறையில் வரி செலுத்தும் வணிகருக்கான உச்சவரம்பு 75 சதவீதத்திலிருந்து 1 கோடியாக உயர்ந்துள்ளது.   

27 பொருட்கள் மற்றும் சேவைகளூக்கு ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது.  கைத்தறி நூலுக்கான   ஜிஎஸ்டி  வரி 18% ல் இருந்து 12% ஆக குறைக்கப்பட்டுள்ளது.  வணிக சின்னமற்ற ஆயுர்வேத மருந்துகளுக்கு ஜிஎஸ்டி 12%ல் இருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.  எழுது பொருள், டீசல் என் ஜின் உதிரி பாகங்களுக்கான ஜிஎஸ்டி 28%ல் இருந்து 18% ஆக குறைக்கப்பட்டுள்ளது.  வணிக சின்னமற்ற        ஸ்னாக்ஸ் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி 12%ல் இருய்து 5 சதவீதம் ஆக குறைக்கப்பட்டுள்ளது.


சார்ந்த செய்திகள்