சென்னை வருகிறார் கவர்னர் வித்யாசாகர் ராவ்
கடந்த ஞாயிற்றுக்கிழமை அ.தி.மு.க. சட்டசபை தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டபோது ஊட்டியில் ஒரு விழாவில் பங்கேற்க கவர்னர் வித்யாசாகர் ராவ் சென்றிருந்தார். அவர் சென்னை வந்ததும் சசிகலா முதல்-அமைச்சராக பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் வித்யாசாகர் ராவ் சென்னை வரவில்லை. நீலகிரி மாவட்ட நிகழ்ச்சி களை ரத்து செய்து விட்டு கோவையில் இருந்து டெல்லி சென்று விட்டார். டெல்லியில் இருந்து மும்பை சென்று விட்டார். இதைத் தொடர்ந்து அவர் செவ்வாய்க்கிழமை வருவார் என்றனர். வரவில்லை. கவர்னர் வித்யாசாகர் ராவ் புதன்கிழமை வருவார் என்று தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர்ராவ் இன்று பிற்பகல் மும்பையிலிருந்து சென்னை வர உள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.