Skip to main content

மதுபோதையில் அரை நிர்வாணமாக போலீசாருக்கு மிரட்டல்

Published on 07/05/2025 | Edited on 07/05/2025
Drunk, half-naked, threatening police

ரோந்து பணியில் இருந்த காவலர்களை இளைஞர் ஒருவர் அரை நிர்வாணத்தில் மது போதையில் ஆபாசமாக திட்டும் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. இந்த சம்பவம் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் நிகழ்ந்துள்ளது.

நாகர்கோவில் அருகே ஆயுதப்படைக்கு செல்லும் சாலையில் உள்ள டாஸ்மாக் கடை பகுதியில் இளைஞர் ஒருவர் மது குடித்துவிட்டு அலப்பறை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சம்பவத்திற்கு இடத்திற்கு வந்தனர். அப்போது போலீசாரை பார்த்தவுடன் தன்னுடைய மேலாடையை கழட்டிய அந்த இளைஞர் அரை நிர்வாணத்தில் ஆபாசமாக போலீசாரை திட்டினார். தொடர்ந்து போலீசாரை தாக்கவும் முயன்றார். உடன் வந்தவர்கள் அந்த இளைஞரை அழைத்துச் செல்ல முயன்ற போதிலும் விடாமல் போலீசாரை அந்த இளைஞர் திட்டியதோடு ஒரு கட்டத்தில் போலீசாரை தாக்கவும் முற்பட்டார். இந்த சம்பத்தின் இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சார்ந்த செய்திகள்