
நான் இறக்கவில்லை உயிரோடுதான் இருக்கிறேன் என திருப்பாச்சி பட புகழ் நடிகர் பெஞ்சமின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நடிகர் பெஞ்சமின் வெற்றி கொடிகட்டு, திருப்பாச்சி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர். இவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், ''சமூக வலைதளங்களில் என்னைப் பற்றி தவறுதலான செய்திகளைப் போட்டு இருக்கிறார்கள். என்னுடைய புகழை கலங்கப்படுத்துவதற்காக போட்டிருக்கிறார்கள். இது நான்காவது முறை. திருப்பாச்சி பெஞ்சமின் நடிகர் இறந்து போய்விட்டார் என்று சொல்லி போட்டு இருக்கிறார்கள். ரொம்ப சங்கடமாக இருக்கிறது. என் வீட்டுக்கு போய் மக்கள் எல்லாம் விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
நான் இப்பொழுது பரமத்திவேலூரில் கோரைகாரன் என்ற திரைப்படத்தில் படப்பிடிப்பில் இருக்கிறேன். இந்த மாதிரி ஒரு சில நண்பர்கள் வியூஸ் வரவேண்டும் என்பதற்காக இறந்து போய்விட்டார் எனச் சொல்லி சமூக வலைத்தளங்களில் விடுகிறார்கள். இது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. திடீரென ஹார்ட் அட்டாக் வந்து எங்கள் வீட்டில் யாருக்காவது இழப்பு ஏற்பட்டு விட்டால் என்ன செய்வது. எனக்கும் ஹார்ட் அட்டாக் வந்து இப்பொழுதுதான் பிழைத்திருக்கிறேன். தயவு செய்து அப்படி செய்யாதீர்கள்'' என தெரிவித்துள்ளார்.