Skip to main content

டெங்கு பாதிப்பு புள்ளி விவரங்களை தமிழக அரசு சரியாக வெளிட்டு வருகிறது: ஓ.பி.எஸ் பேட்டி

Published on 10/10/2017 | Edited on 10/10/2017
டெங்கு பாதிப்பு புள்ளி விவரங்களை தமிழக அரசு சரியாக வெளிட்டு வருகிறது: ஓ.பி.எஸ் பேட்டி

டெங்கு பாதிப்பு புள்ளி விவரங்களை தமிழக அரசு சரியாக வெளிட்டு வருகிறது என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

டெங்குவுக்கான விழிப்புனர்வு தொடர்ந்து தமிழக அரசு வழங்கி தான் வருகிறது. அதை தடுப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டு தான் வருகிறோம். நாளை நடைபெற உள்ள அமைச்சரவை கூட்டத்திற்கு பின் என்ன முடிவுகள் எடுக்கப்படும் என தெரியவரும்.

தேவையான செவிலியர்கள் மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். டெங்கு இறப்பின் புள்ளி விவரங்களை தவறாக கூறி வருகிறார்கள். தமிழக அரசு புள்ளி விவரங்களை சரியாக வெளிட்டு வருகிறது என்றார். மேலும் அமைச்சர் செல்லூர்ராஜு குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்.

சார்ந்த செய்திகள்