அரசு பேருந்து, தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து

கோவை, அன்னூர் அருகே அரசு பேருந்தும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 20 பெண்கள் உள்பட 35 பேர் காயமடைந்தனர்.
கோவையில் இருந்து சக்தி நோக்கி சென்ற அரசு பேருந்தும், சக்தியில் இருந்து கோவை நோக்கி சென்ற தனியார் பேருந்தும் அன்னூர் அரசு பேருந்து பணிமனை அருகே மோதிக்கொண்டனத்தில் இந்த விபத்து ஏற்பட்டது. விபந்து நடந்த தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்த 45 பேரில் 38 பேர் அன்னூர் அரசு மருத்துவமனையிலும், 7 பேர் கோவை அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.
-அருள்குமார்