Skip to main content

எதிர்கட்சியினரை மூக்குடைக்கும் திமுக எம்.எல்.ஏ. –இளைஞர்களை கவரும் ஊராட்சி கூட்டம்

Published on 20/01/2019 | Edited on 20/01/2019
k


வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தொகுதி எம்.எல்.ஏவும், திமுக மத்திய மா.செவுமான நந்தகுமார், 9ந்தேதி ஊராட்சி கூட்டத்தை தொடங்கினார். தினசரி 3 ஊராட்சிகள் மட்டும்மே என கணக்கு வைத்துக்கொண்டு கூட்டம் நடத்துகிறார். கழனிப்பாக்கம், கந்தனேரி உட்பட இதுவரை 6 ஊராட்சியில் ஊராட்சி சபா கூட்டத்தை நடத்தியுள்ளார்.


பொங்கல் விழாவை முன்னிட்டு கூட்டம் ஏற்பாடு செய்து மக்களுக்கு நெருக்கடி தரக்கூடாதென தயங்கி ஊராட்சி சபா கூட்டம் நடத்துவதை நிறுத்திவைத்தார். பொங்கல் முடிந்ததும் மீண்டும் ஊராட்சி சபா கூட்டம் தொடங்கியுள்ளார்.


ஊராட்சி சபா கூட்டத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் தந்து முதலில் அவர்களிடம் மைக் தந்து குறைகளை கேட்பவர், அடுத்து இளைஞர்கள், இறுதியில் ஆண்கள் என அந்த கிராமத்தில் உள்ள குறைகளை கேட்கிறார். கழனிப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த வாலிபால் டீம் இளைஞர்கள் விளையாட்டு பொருள் தேவை என கோரிக்கை வைத்தனர் எம்.எல்.ஏவிடம். கந்தனேரி கபடி டீம் இளைஞர்களும் அதே கோரிக்கையை வைத்தனர். இவர்கள் கேட்பதை பார்த்து எட்டவாது, பத்தாவது, 11வது படிக்கும் பொடிசுகளும் ஒரு பட்டியல் தந்து அண்ணனுங்க எங்களை விளையாட்டுல சேர்ந்துக்கமாட்டேன்கிறாங்க. அதனால் அவுங்களுக்கு வாங்கி தர்றமாதிரி எங்களுக்கும் வாங்கி தாங்க சார் என கோரிக்கை வைத்தனர்.


அந்த கோரிக்கைகளுக்கு உடனே செவிசாய்த்த எம்.எல்.ஏ நந்தகுமார், உடனடியாக கிரிக்கெட் மட்டை, பந்து, நெட், பேட், வாலிபால், டென்னிஸ் பேட் என 5 செட் வாங்கி அந்த கிராமங்களுக்கு நேரடியாக சென்று வழங்கியுள்ளார். இதனைப்பார்த்து அந்த கிராம பெண்கள் சந்தோஷமாகி, மற்ற கோரிக்கைகளையும் நிறைவேற்றி வைங்க தலைவரே என கோரிக்கை வைத்தனர். நிச்சயம்மாக, வீட்டுமனை பட்டா, விதவை உதவித்தொவை, முதியோர் உதவித்தொகை வாங்கி தர நிச்சயம் முயற்சி செய்கிறேன் என வாக்குறுதி தந்துவிட்டு வந்தார்.

இதுப்பற்றி நம்மிடம் பேசிய எம்.எல்.ஏ நந்தகுமார், ஊராட்சி சபா கூட்டத்திற்கு பெரும்பாலும் வாயதானவர்கள் அதிகளவில் வந்து முதியோர் உதவித்தொகை விண்ணப்பித்தேன் தரமறுக்கிறார்கள், வந்துக்கொண்டுயிருந்த உதவித்தொகை வரவில்லை என்பதே 50 சதவித புகார்களாக உள்ளது. அதற்கடுத்து வீட்டுமனைப்பட்டா வேண்டும் என்பதும், சாலை வசதி வேண்டும் என்பதாகும்.

ஒவ்வொரு ஊராட்சியிலும் மக்கள் தரும் கோரிக்கை மனுக்களை பைல் செய்து வகை பிரிக்கிறோம். கோரிக்கைகளில் என்னால் தனிப்பட்ட முறையில் செய்ய முடிந்த பொருட்கள் வாங்கி தருவது, கோயில் கட்டிதருவது, சீரமைப்பது, விளையாட்டு மைதானங்கள் பராமரிப்பு, தண்ணீர் டேங்க் அமைத்தல் போன்றவற்றை செய்கிறேன், அரசாங்கத்தால் தான் செய்ய முடியும் என்பதை தனியாக எடுத்து வைத்துள்ளேன். மக்கள் சந்திப்பு முடிந்தபின் மக்களோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடப்போகிறேன் என்றார் அதிரடியாக.


அரசாங்கம் நடத்த சொல்ற, அதிகாரிகள் வந்து கலந்துக்கற கிராம சபா கூட்டத்தில் பொதுமக்களால் வைக்கப்படும் கோரிக்கைக்கே எந்த நடவடிக்கையும் இல்லை. இதில், எதிர்கட்சியான திமுக நடத்தற கிராமசபா கூட்டத்தால் விடிவு வந்துடுமா என ஆளும்கட்சியான அதிமுக, பாஜக உட்பட சில கட்சியினர் திமுகவினரை பார்த்து நக்கலடிக்கின்றனர். அவர்களுக்கு பதிலடி தரும் விதத்தில் திமுக எம்.எல்.ஏ கிராமசபா கூட்டத்தில் மக்களின் தேவைகளை நிறைவேற்றி பகடி பேசுவர்களுக்கு பதிலடியை தந்துவருகின்றனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

  இந்திய அளவில் முதலிடம்! விருதுபெற்ற விருதுநகர் மாவட்டம்! -இந்த நேரத்தில் இது வேறயா?

Published on 28/12/2018 | Edited on 28/12/2018
k

 

மத்திய அரசு நிதி ஆயோக் திட்டத்தின் கீழ் ஆய்வு நடத்தப்பட்டு,   இந்தியாவில் முன்னேற்றம் காணத்துடிக்கும் 117 மாவட்டங்களில், அனைத்துத்துறைகளிலும் சிறந்த மாவட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது விருதுநகர்.

 

 கல்வி, தொழில், வளர்ச்சிப் பணிகளில் தொடர்ந்து முன்னேற்றம் காட்டி வருவதாகவும், அடிப்படை உட்கட்டமைப்பு, கல்வி என அனைத்திலும் நன்கு முன்னேறிய மாவட்டங்களில் விருதுநகர் மாவட்டத்துக்கு முதலிடம் கிடைத்திருக்கிறது. 

 

v


புதுடில்லியில் 26-ஆம் தேதி நடைபெற்ற விழாவில், விருதுநகர் மாவட்ட வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்தி, அதற்கான பங்களிப்பினைச் சிறந்த முறையில் நல்கியமைக்காக, மாற்றத்தின் வெற்றியாளர் விருது பதக்கத்தையும் பாராட்டுச் சான்றிதழையும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானத்

 

துக்கு வழங்கியிருக்கிறார் குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு.  
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி மற்றும் சாத்தூர் அரசு மருத்துவமனைகள், தானமாகப் பெறப்பட்ட ரத்தப் பரிசோதனையில் அலட்சியமாக நடந்துகொண்டு,  கர்ப்பிணிப் பெண்ணுக்கு  எச்.ஐ.வி. தொற்றினை ஏற்படுத்தி, தமிழக மக்கள் விருதுநகர் மாவட்டத்தை ஒரு தினுசாகப் பார்க்கின்ற நிலையில், பால் வளர்ச்சித்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை செயலாளர் டாக்டர் சந்தோஷ்பாபு ஆகியோருடன் சென்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து வாழ்த்து பெற்றிருக்கிறார் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சிவஞானம். 

ரோமாபுரி நகரம் பற்றி எரிந்தபோது பிடில் வாசித்தானாம் நீரோ மன்னன். இது ஏனோ நம் நினைவுக்கு வந்து தொலக்கிறது. 

 

Next Story

சட்டவிரோத  மணல் குவாரியை உடனே மூட குளித்தலையில்  நாளை 29.11.2018 கடை அடைப்பு !

Published on 28/11/2018 | Edited on 28/11/2018

 

zz

 

காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் சார்பில் குளித்தலையில்   பொதுமக்கள்-மக்கள் இயக்கங்கள் - அரசியல்கட்சிகள்  இணைந்து மண்டபத்தில் நடந்த  கலந்தாய்வு கூட்டத்தில் 400  க்கும் மேற்பட்டோர் பங்கேற்று   ஆலோசனை நடைபெற்றது.     இக் கூட்டத்திற்கு  காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த  கே.சி.ஆர் . சண்முகம் அவர்கள்   தலைமை வகித்தார்.  ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த ராஜேசு கண்ணன்  அவர்கள் அனைவரையும்  வரவேற்றார்.  


 

நடைபெற்ற  கூட்டத்தில் முதலில்  காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர்.முகிலன்  அவர்கள் காவிரி பாதுகாப்பு உறுதிமொழியை  வாசித்தார். எனது உயிரினும் மேலான அன்னை காவிரியை அழியாமல் தடுக்க தொடர்ந்து போராடுவோம்!

காவிரியை காக்க போராடுபவர்களுக்கு எப்போதும் துணை நிற்ப்போம் என உறுதி ஏற்போம்!!   உறுதி !  உறுதி!!  உறுதி !!!  " எனக் கூற , தோழர் முகிலன் கூறியதை கூட்டத்தில் பங்கேற்ற  400  பேர்  அனைவரும் உறுதிமொழியை திரும்பக் கூறினார்.   அதன் பின்பு  காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர்.முகிலன்  அவர்கள் குளித்தலையில் நடைபெறும் கலந்தாய்வு கூட்டத்தின் நோக்கத்தை விளக்கி பேசினார்.

 
இந்த  கலந்தாய்வு கூட்டத்தில் சுயாட்சி இயக்கத்தை சேர்ந்த கிறிஸ்டினா  சாமி, தமிழக விவசாயிகள்  சங்கத்தை சேர்ந்த  ம.பா.சின்னத்துரை, விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த சிவசூரியன், ம.தி.மு.க டி.டி சி.சேகரன், சி.பி.ஐ எம்.எஸ்.மகாலிங்கம், சி.பி .எம்.. ராஜு, நாம் தமிழர் கட்சி. இளஞ்செழியன்- சீனி பிரகாசு , விடுதலை சிறுத்தைகள் .முசிறி கலைச்செல்வன்,  மனத்தட்டை தி.மு.க பொன்னர்,   மனித நேய மக்கள் கட்சி அயூப்கான்,   எஸ் .டி .பி .ஐ . அப்துல் அஜீஸ்  , சாமானிய மக்கள் நலக் கட்சி முனைவர் .குணசேகரன், காவிரி மீட்பு குழு. வெங்கடேசன், பெல் தொழிலாளர் சங்கம் குளித்தலை சீதாராமன், வழக்கறிஞர் திருமலைராஜா, குளித்தலை இயற்கை பாதுகாப்பு இயக்கம் சுதர்சன்-பி .எஸ்.வி.ராஜகோபால்-எஸ்.என்.எஸ்.ராஜுக்குமார், குளித்தலை நகர்நல சங்கம் தோழர். கார்த்திகேயன், குளித்தலை மாற்றம் அமைப்பு தோழர். அருண் முத்துவேல், குளித்தலை மாணவர் -இளைஞர் கூட்டமைப்பு தோழர். பிரபு -பூமிநாதன், சென்னை இயற்கை செயற்பாட்டாளர் தோழர்.ஜீவானந்தம்,  தண்ணீர்  அமைப்பு  வினோத்,  மே 17  இயக்கம் திலீபன், திராவிடர் விடுதலைக் கழகம் தோழர். சத்தியசீலன், பெரியார் திராவிடர் கழகம்  தோழர்.தனபால், கல்வி மேம்பாட்டு கூட்டமைப்பு ஆசிரியர் ராமசாமி, சட்ட செயற்பாட்டாளர் தோழர். வாசுதேவன், முசிறி பசுமை  சிகரம் தோழர்.விதை லோகநாதன், பாசன விவசாயிகள் சங்கம் தோழர்.அன்பு செழியன், ஆதி தமிழர் பேரவை தோழர்.மோகன்குமார்,  குளித்தலை  மூத்த சமூக செயற்பாட்டாளர்  தோழர்.கோபால் தேசிகன், கபிலர்மலை  சரசுவதி காகித ஆலை எதிர்ப்பு போராட்டக் குழு தோழர்.பொன்னரசு,

 

மதுரை ஏழு தமிழர் விடுதலை கூட்டமைப்பு தோழர் .காந்தி,  காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க வாங்கல் விசுவநாதன், கரூர் முரளி, குளித்தலை  ம.தி மு.க . தோழர். எம்.ஆர்.டி.ரவிக்குமார், குளித்தலை வாழைக்காய் வியாபாரிகள் சங்கம் தோழர் .சேட்டு, ஆட்டோ தொழிலார் சங்கம் தோழர் ஆரோக்கியசாமி, மக்கள் பாதை தோழர்.சீனிவாசன்  ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

 

காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த தோழர்.ராஜேசுவரி, கரூர் சதீசு ஆகியோர் காவிரியை காக்கும் எழுச்சி பாடல்களை பாடினர்.  கலந்தாய்வு கூட்டத்தை காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம்  ராஜேசுவரி தொகுத்து வழங்கினார்.     12 .08 .2017  -இல் மணத்தட்டை மணல் குவாரியை மூடக் கோரி குளித்தலை சுங்க கேட்டில்  நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு கைதான 56  பேர்களுக்கும்   துணிப்பை  வழங்கி  நல்லக்கண்ணு  சிறப்பு செய்தார்.

 
கடந்த மாதம் 12 .09 .2018    மணத்தட்டை மணல் குவாரியை மூடக் கோரி முற்றுகை  போராட்டத்தில் கலந்து கொண்டு கைதான 14  பேர்களுக்கும் அய்யா நல்லக்கண்ணு  நூல்கள் வழங்கி  சிறப்பு செய்தார்.    காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர்.முகிலன்,  விடுதலை போராட்ட வீரரும் ,  மூத்த பொதுவுடமை இயக்கத் தலைவருமான அய்யா.நல்லகண்ணு  ஆகியோர்   எழுச்சிமிக்க    சிறப்புரை  ஆற்றினார்கள்.    

குளித்தலை கண்ணன் திருமண மண்டபத்தில் நடந்த  கலந்தாய்வு கூட்டத்தில் 400  க்கும் மேற்பட்டோர் பங்கேற்று  விவாதித்து    இறுதியாக  நிறைவேற்றப்பட்ட  கூட்ட தீர்மானங்கள்:

 

சட்டவிரோத மணத்தட்டை மணல் குவா ரியை உடனே மூட வேண்டும்.   அனுமதி இன்றி இயங்கும் குளித்தலை-ராஜேந்திரம் அரசு மணல்கிடங்கை உடனே மூட வேண்டும்.

 மணல்குவாரியை மூடாவிட்டால் முதல்கட்டமாக இம்மாத(நவம்பர்) இறுதி வாரத்தில்  குளித்தலையில்  ஒருநாள் கடை அடைப்பு நடத்தப்படும்.  மனத்தட்டை  மணல்குவாரியை மூடாவிட்டால், புதிதாக மணல்குவாரிக்கு அனுமதி கொடுத்தாலோ,   இரண்டாம் கட்டமாக ஜனவரி இறுதியில் .நல்லகண்ணு தலைமையில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அனைத்து அமைப்புகள் - கட்சிகள் - பொதுமக்கள் ஆகியோரை இனைத்து  முற்றுகையிடுவது என முடிவு செய்யப்பட்டது.

 

சட்டவிரோதமாக மணல்கடத்தலில் ஈடுபட்ட திருச்சி மாவட்ட  மணச்சநல்லூர்  வட்டாட்சியர் ரேணுகா அவர்களை உயர்நீதிமன்ற உத்தரவுபடி சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மணல் குவாரியை மூட கோரி நடத்தப்படும் கடை அடைப்புக்கு ஆதரவு தரக்கோரி குளித்தலையில் உள்ள கடைவீதிகளில் ஒவ்வொரு கடைகளுக்கு நோட்டிஸ் விநியோகம் செய்து ஆதரவு தெரிவித்தனர். மணல் குவாரியை மூடக்கோரி பொதுமக்கள் வியாபாரிகள் கடை அடைப்பு நடத்துவது குளித்தலை பகுதியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.