Skip to main content

இலங்கைக்கு கடத்த முயன்ற 22 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்

Published on 14/10/2017 | Edited on 14/10/2017
இலங்கைக்கு கடத்த முயன்ற 22 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்

சென்னையில் இருந்து நேற்று முன்தினம் காலை 10.15 மணிக்கு கொழும்பு செல்லும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட தயாரானது. அதில் பயணம் செய்ய வந்த பயணிகளிடம் சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, சென்னையை சேர்ந்த முகமது அசாருதீன் (28), சாதிக் (32), உமர் பாரூக் அலி (34), நிவாஸ்கான் (26), இஷாந்த் அகமது (39), ஜாகிர் உசேன் (40), மீரான் உசேன் (23), அப்துல் ரகுமான் (39) ஆகியோர் ஒரு குழுவாக சுற்றுலா பயணிகள் விசாவில் செல்ல வந்தனர். அவர்கள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதால், தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அவர்கள், முன்னுக்கு பின் முரணாக பேசியதால் உடமைகளை சோதனையிட்டனர். 

அதற்குள் அமெரிக்க டாலர், குவைத் தினார், ஓமன் ரியால்ஸ், சவுதி ரியால்ஸ், யூரோ கரன்சி உள்ளிட்ட வெளிநாட்டு பணம் கட்டுக்கட்டாக மறைத்து வைத்திருப்பது தெரிந்தது. இதன் சர்வதேச மதிப்பு 22 லட்சம். விசாரணையில், இவர்கள் அனைவரும் வியாபாரிகள். விமான நிலையத்துக்கு வந்த ஒருவர், இந்த வெளிநாட்டு பணத்தை கொடுத்து இலங்கையில் உள்ள ஒருவரிடம் ஒப்படைத்தால் அதற்கு ஈடாக 10 சதவீதம் கமிஷன் தருவார் என்றும், அதற்கு ஆசைப்பட்டு வாங்கியுள்ளனர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களின் பயணத்தை அதிகாரிகள் ரத்து செய்து தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

சார்ந்த செய்திகள்