திருவாரூர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் ஓ.பன்னீர்செல்வம்மற்றும் முதல்வர் பழனிசாமிஆகியோர் பரப்புரை செய்தாலேபோதும் நாங்கள் வெற்றி பெற்றுவிடுவோம் என்று அமமுகவின் புகழேந்தி கருத்து தெரிவித்துள்ளார். மேலும் திருவாரூரில் யார் போட்டியிட்டாலும் அவரை எதிர்கொள்ள அமமுக தயாராக உள்ளது என்றும், கலைஞர் இடத்தில் யாரையும் ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு திருவாரூர் மக்களுக்கு விருப்பம் இல்லை என்றும் புகழேந்தி கருத்து தெரிவித்துள்ளார்.