Skip to main content

சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்தவருக்கு வாழ்நாள் சிறை தண்டனை!

Published on 28/09/2017 | Edited on 28/09/2017
சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்தவருக்கு வாழ்நாள் சிறை தண்டனை!

சேலம்மாவட்டம், காடையாம்பட்டி வட்டம், தீவட்டிப்பட்டி அருகிலுள்ள நைனாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது-37); இவர், அருகிலுள்ள கள்ளிக்காடு பகுதியில் தங்கியிருந்து அங்கெ விவசாய கூலி வேலை செய்துவந்தார்.

கடந்த, 2007-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தேதியன்று இவர் வேலைக்கு சென்ற தோட்டத்தில் இருந்த வீட்டில் சுமார் எட்டு வயது நிரம்பிய சிறுமி ஒருவர் தனியே விளையாடிக் கொண்டிருந்தார்.

அந்த சிறுமியை அருகிலுள்ள கரும்புக்காடு பகுதிக்கு தூக்கிச்சென்று சிறுமியை பலாத்காரம் செய்த ஆறுமுகம், விஷயம் வெளியே தெரிந்துவிடக்கூடாது எனக்கருதி, சிறுமியின் கழுத்தையும் நெரித்து கொலை செய்தார்.

இதுகுறித்து, வழக்குப் பதிந்து விசாரித்த தீவட்டிப்பட்டி போலீசார் ஆறுமுகத்தை கைது செய்து அவர் மீது சேலம் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கின் விசாரணை முடிவில், நேற்று தீர்ப்பு நீதிபதி விஜயகுமாரி அவர்கள், குற்றம் சுமத்தப்பட்ட ஆறுமுகத்துக்கு வாழ்நாள் தண்டனையும், 20-ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து ஆறுமுகம் கோவை நடுவன் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

- சிவசுப்பிரமணியம்

சார்ந்த செய்திகள்