நாடாளுமன்றத்தில் யாரும் பேச முன்வருவதில்லை - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
சென்னை கிறித்தவக் கல்லூரி மேனிலைப்பள்ளியில் ‘இளைஞர் பாராளுமன்றம்’ என்ற விழா இன்றும், நாளையும் நடைபெறுகிறது. தென்னிந்தியாவின் மிகப்பெரிய குழந்தைகள் விழா இது என்பது குறிப்பிடத்தக்கது. பல பள்ளிகள் ‘மாதிரி ஐக்கிய நாடுகள் அவை’யை சிறப்பாக நடத்தும் சூழலில், சென்னை கிறித்தவக் கல்லூரி மேனிலைப்பள்ளியில் இந்திய பாராளுமன்றத்தை பள்ளி மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என இந்த விழாவானது நடத்தப்படுகிறது.
இதன் தொடக்கவிழாவில் சென்னை கிறித்தவ கல்லூரி மேனிலைப்பள்ளியின் முன்னாள் மாணவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அதில்,
மதச்சார்பின்மை இல்லாமல் சமூகம் பிரிந்தால் நாடாளுமன்றத்தின் செயல்பாடுகளும் உடைந்துபோகும். தற்போதெல்லாம் நாடாளுமன்றத்தில் விவாதங்கள் நடப்பதேயில்லை. இந்திய அரசியல் தளத்தில் பலரும் நாடாளுமன்றத்தில் விவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு பிரதமரும் பதிலளித்துப் பேசுவார். ஆனால், தற்போது அங்கு யாரும் விவாதத்தில் ஈடுபடுவதில்லை. பிரதமருக்கு பதிலாக அங்கு அமைச்சர்கள்தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

படங்கள்- அசோக் குமார்