நிவர் புயல் காரணமாக சென்னையின் பெரும்பாலன பகுதிகளின் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. சில இடங்களில் வீடுகளுக்குள்ளும் மழை நீர் புகுந்துள்ளது. செம்மஞ்சேரி பகுதியில் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட மீனவர் குடியிருப்பு பகுதியில் தண்ணீர் சூழ்ந்து தத்தளித்து வரும் மக்களை தே.மு.தி.க. பொருளாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறி அவர்களுக்கு தேவையான உணவு பொருட்களை வழங்கினார்.

Advertisment