டெங்குவுக்கு 5 பேர் பலி
தாம்பரம் சந்தோசபுரம் திருவள்ளுவர் தெருவை சேர்ந்த தனியார் நிறுவன மேலாளர் ஸ்ரீதர் (32) டெங்குவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் பலியானார். மதுரை அருகே காயாம்பட்டியைச் சேர்ந்த பாலகிருஷ்ணனின் மகள் திருச்செல்வி (11). உலகனேரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பு படித்தாள். டெங்கு பாதிப்பு காரணமாக மதுரை அரசு மருத்துவமனையில் நேற்று இறந்தாள். திருச்சி ஸ்ரீரங்கம் தாலுகா மணிகண்டம் அருகே உள்ள துரைக்குடியை சேர்ந்த ராஜ்குமார்-மாரிக் கண்ணு தம்பதியின் மகள் கிரிஷ்கா (4). டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் அரசு மருத்துவமனையில் நேற்று இறந்தாள்.
திருவாரூர் மாவட்டம் பேரளம் நடுகந்தன்குடியை சேர்ந்த ஜெயக்குமார் மகள் மோனிஷா (23). சென்னையில் உள்ள தனியார் ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவர் டெங்கு காய்ச்சல் காரணமாக தஞ்சை தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார். விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியை சேர்ந்த தொழிலதிபர் கிருஷ்ணன் (36)டெங்குவால் பாதித்து ஜிப்மர் மருத்துவமனையில் நேற்றுமுன்தினம் இறந்தார்.