விசாரணைக்கமிஷன் என்பது
கண்துடைப்பாக உள்ளது: கதிரவன்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டியில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து பேசிய அக்கட்சியின் தலைவரும் உசிலம்பட்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கதிரவன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
’’மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை வேண்டும் என ஒபிஎஸ் கேட்டார். 75 நாட்கள் மருத்துவமனையில் என்ன நடந்தது என மக்களுக்குத் தெரிய வேண்டும் எனக்கூறினார். மக்களின் கருத்தும் அதுவாகத்தான் இருந்தது. ஆனால் தற்போது ஒபிஎஸ்ம் இபிஎஸ்ம் இணைந்த பின்னர் கடந்த ஒருமாதத்திற்கு முன் முதல்வர் இபிஎஸ் நீதி விசாரணை அமைக்கப்படும் என்றார். கடந்த ஒரு மாதமாக யார் விசாரிக்கிறார் யாரை விசாரித்தார்கள் என்பது தெரியவில்லை. எனவே விசாரணைக்கமிஷன் என்பது கண்துடைப்பாக உள்ளது. மிக விரைவில் விசாரணைக்கமிஷன் அமைத்து 2 மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனக்கூறினா.
- முகில்