எட்டு வழி பசுமை சாலை குறித்த விவசாயிகள் கலந்துரையாடல் கூட்டம் திருவண்ணாமலை அடுத்த வடஆண்டாப்பட்டு கிராமத்தில் உள்ள ஒரு தனியார் ஆலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தக் கூட்டத்தை நடத்தக் கூடாது என காவல்துறையினர் நேற்று இரவு முதலே கெடுபிடி செய்ய தொடங்கினர். இந்த கூட்டத்திற்கு இடதுசாரிகளின் விவசாய அமைப்பைச் சேர்ந்த அகில இந்திய துணைத் தலைவர் விஜி. கிருஷ்ணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் சண்முகம் ஆகியோர் கலந்து கொள்ள இருந்தனர். இவர்களும் வரக்கூடாது என தெரிவித்தனர். இதனை மறுத்தனர் கம்யூனிஸ்ட் கட்சியினர்.

Advertisment

இதனால் கூட்டம் நடைபெற இருந்த தனியார் ஆலைக்கு சென்ற போலீசார், அதன் உரிமையாளரை மிரட்டியதால் அவர் கூட்டம் நடத்த இடம் தரவில்லை. இந்த நிலையில் இன்று காலை திருவண்ணாமலை மாவட்ட சிபிஎம் அலுவலகத்திலேயே கலந்தாய்வு கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

இதில் கலந்து கொள்ள திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இருந்து திருவண்ணாமலை நகரை நோக்கி வந்தனர். அப்படி வந்தவர்களை எந்த தகவலும் சொல்லாமல் போலீசார் வழியிலேயே மடக்கி கைது செய்தனர். இந்த தகவல் தாமதமாகவே நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்திற்கு தெரிந்து காவல்துறையினரிடம் விசாரித்துள்ளனர். ஆனால் போலீசாரோ, அப்படி ஒன்றும் நடக்கவில்லை என்று கூறியுள்ளனர்.

Advertisment

இதற்கிடையே காலை 11.30 மணி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கலந்துரையாடல் கூட்டத்திற்கு வந்துகொண்டிருந்த கலசப்பாக்கம் தாலுக்கா, காம்பத்து கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் சீனிவாசன், ராம்கான், செல்வராஜ், விஜி, பவன்குமார், ஏழுமலை, அண்ணாதுரை போன்றவர்களை போலீசார் கைது செய்து இழுத்துச் சென்று வேனில் ஏற்றினர்.

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

இதுதொடர்பாக நாம் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் சண்முகத்திடம் கேட்டபோது, தகவல் எதுவும் கூறாமல் கலந்துரையாடல் கூட்டத்திற்கு வந்தவர்களை கைது செய்வது கண்டனத்திற்கு உரியது என்றார். மேலும், எட்டு வழிச் சாலை தொடர்பாக நாங்கள் நீதிமன்றத்தை நாடப்போவதில்லை. மக்கள் களத்திலேயே போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இந்த சாலை முழுக்க முழுக்க கனிம வளங்களை ஏற்றிச் செல்லும் கார்ப்பரேட்டுக்களுக்காக அமைக்கப்படுகிறது என தெரிவித்தார்.