Skip to main content

தமிழகத்தில் மேலும் 5 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை! முதல்வர் எடப்பாடி பழனிசாமி தகவல்!!

Published on 19/08/2019 | Edited on 20/08/2019

தமிழகத்தில் கூடுதலாக ஐந்து லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். சேலம் மாவட்டம் நங்கவள்ளியில் முதல்வர் சிறப்பு குறைதீர் கூட்டத்தை திங்கள்கிழமை (ஆகஸ்ட் 19), முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையில் நடந்த இவ்விழாவில், முதல்வர் பேசியதாவது:


முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் திட்டம் மூலம் பொதுமக்கள் பயனடைய முடியும். 234 தொகுதிகளிலும் இத்திட்டம் இன்று முதல் (ஆக. 19) செயல்படுத்தப்படும். பொதுமக்கள் அதிகாரிகளை தேடிச்சென்று மனு கொடுத்த நிலை மாறி, அதிகாரிகளே மக்களை தேடிச்சென்று மனு வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மேலும் 5 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இது தவிர, பட்டா கேட்டு பலரும் மனு கொடுத்துள்ளனர். இவர்களுக்கு பட்டா கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டித்தரப்படும்.


பொதுமக்கள் ஏற்கனவே வழங்கிய பெரும்பாலான கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. எடப்பாடியில் சரபங்கா நதியின் இரண்டு புறமும் சீர் செய்ய கோரிக்கை வைத்து இருந்தனர். இதை ஏற்று, இரண்டு கரையோரங்களும் சீரமைக்கப்படும். தமிழகத்தில் தொழில்வளம் பெருக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. மேட்டூர், ஓமலூர், சங்ககிரி, எடப்பாடி சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 100 ஏரிகளில் 565 கோடி ரூபாய் மதிப்பில் மேட்டூர் உபரிநீர் கொண்டு வந்து நிரப்பப்ப டும். குடிமராமத்து பணிகளும் நடந்து வருகின்றன.


 

tamilnadu old peoples pension extend 5 laks peoples cm edappadi palanisamy announced




 


தற்போது மேட்டூர் அணையில் நீர்மட்டம் 115 அடியை எட்டியுள்ளது. இன்னும் மீதம் ஐந்து அடி உள்ளது. விரைவில் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டும். இதன்மூலம் விவசாயிகளுக்குத் தேவையான தண்ணீர் வழங்கப்படும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் உதயகுமார், தங்கமணி, சரோஜா, மாவட்ட ஆட்சியர் ராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


திருச்செங்கோடு - ஓமலூர் நான்குவழி சாலை:


இதையடுத்து கொங்கணாபுரத்தில் நடந்த சிறப்பு குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை மனுக்களைப் பெற்றார். அப்போது அவர் பேசுகையில், ''எடப்பாடி பகுதியில் கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டு குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. சில பகுதிகள் கூட்டுக்குடிநீர்  திட்டத்தில் சேர்க்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பகுதிகளும் விரைவில் சேர்க்கப்படும். புறவழிச்சாலை வேண்டும் என்று மக்கள் கேட்டுள்ளதும், நிறைவேற்றப்படும். தவிர, திருச்செங்கோடு - ஓமலூர் செல்லும் சாலை நான்குவழிச்சாலையாக மாற்றப்பட உள்ளது. 


ஓசூரில் சர்வதேச ஏல மையம் 20 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு விவசாயிகள் பூக்களைக் கொண்டு வந்து விற்கலாம். தமிழகம் முழுவதும் கிராம சாலைகள் புதிய சாலைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. தமிழகம் மருத்துவத்துறையிலும், கல்வித்துறையிலும் சிறந்து விளங்குகிறது,'' என்றார்.





 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Two people who went to vote fainted and passed way

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்ற சின்னபொண்ணு (77) என்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோன்று, சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி(65) தனது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து பலியானார். சேலம் மாநகரில் நடந்த இந்த துயர் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.