
தமிழகத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கைகள், கரோனா தடுப்பூசி போடும் பணிகள் ஆகியவற்றை தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக, மாநிலம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும், மற்ற நாட்களில் கூடுதல் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கும், இரவு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக கரோனா பாதிப்பு என்பது 33 ஆயிரம் என்ற அளவிலேயே தொடர்ந்து இருந்துவருகிறது.
சென்னை, கோவை, சேலம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கரோனா பாதிப்பு மிக அதிகமாக இருந்துவருகிறது. இதற்கிடையே, இந்தப் பாதிப்புக்கள் தொடர்பாக ஆய்வு செய்ய, நாளை (20.05.2021) தமிழக முதல்வர் ஸ்டாலின் சேலம், ஈரோடு, கோவை ஆகிய மாவட்டங்களுக்குச் செல்ல இருக்கிறார்.